ஞாயிறு, 7 டிசம்பர், 2014

குறுங்கதை # 9 பழையசோறு









அது ஒரு செழுமையான கிராமம்.அக்கிராமத்து செல்வந்தரொருவனின் மகன்,திருமணமாகி குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த பொழுது அவனுடைய வீடு தினமும் கல்யாண வீடு போன்றே களைகட்டியிருக்கும். நன்பர்கள் கூட்டம் எந்நேரமும் அவனைச்சுற்றி அரட்டை சீட்டுக்கச்சேரி என் ஒரே அமர்ககளந்தான். இப்படிப்பட்ட கேளிக்கைகள் தொடர்வது அவ்வீட்டின் புது மணப்பெண்ணிற்கு பிடிக்கவில்லை.இதற்க்கு ஒரு முடிவு கட்டிவிட தீர்மானித்தாள்.


என்றும் போல் அன்றும் நன்பர்கள் கூடினர்,சீட்டுக்கச்சேரி ஆரம்பித்து வெகு ஜோராக போய்க்கொண்டிருந்தது.மதிய உணவு வேளை நெருங்கியதும்,புதுமணப்பெண்,” என்னங்க சாப்பாட்டு நேரம் வந்ததுகூட நினைவில்லாமல் சீட்டாடுகிறீர்களே,பழையசோறு ஆறிப்போகப்போகுது,சீக்கீரமா வந்து சாப்பிட்டுவிட்டு போங்க:என்று குரல் கொடுத்தாள்.நண்பர்களும் சற்று திகைத்துப்போனார்கள்
.

மாப்பிள்ளையும்,திகைப்புடன்,வீட்டிற்குள் சென்றான்,சுட சுட சோற்றையும் பல்வித காய்கறிகளையும் பரிமாறினாள்.ஆச்சரியப்பட்ட அவன் ஏன் என்று கேட்க தயங்கியவாறு உண்டுவிட்டு,மறுபடியும் திண்ணைக்குச்சென்று கச்சேரியைத் தொடர்ந்தான்,


இவ்வாறு தொடர்ந்து உணவுவேளையின்போது,பழைய சோறு சாப்பிட அழைப்பு வரும்,அங்கு சென்றால்,சுட சுட விருந்துணவு காத்திருக்கும்.மாப்பிள்ளையும் பொறுமையிழந்து,பழைய சோறு,பழைய சோறு என்று கூவிக்கூவி அழைத்து,என் மானத்தை வாங்கிவிட்டு,இப்படி தினம் தினம் விருந்து படைக்கிறாயே.இதர்க்கு என்னதான் அர்த்தம் “ என்று ஒருவழியாக அன்று கேட்டேவிட்டான்.


அந்தப் பெண் அலட்டிக்கொள்ளாமல் “ பழைய சோறு என்று சொல்லிவிட்டு வழக்கம்போல சுட சுட உணவு பரிமாறும்,என்னை பைத்தியம் என்று நினைத்துவிட்டீர்களோ? நீங்க சாப்பிடற உணவு,நீங்க சம்பாதித்தலிருந்து கிடைத்தல்லவே,இந்தசாப்பாடு உங்கள் மூதாதையருடைய சம்பாத்தியம்.அதனால்தான்,அதை பழையசோறு என்று கூறினேன்.

என்றைக்கு நீங்க உழைத்து சம்பாரித்து பணம் கொண்டு வந்து கொடுத்து,அதில் நான் சமைத்துப்போடுகிறேனோ,அன்றைய சமையல்தான், புத்தம் புது விருந்துணவு” என்று கூறிய மனைவியை, அன்றுதான் முதல் முறை பார்ப்பதுபோல் பார்த்து,வியப்படைந்தான்.


திருமுருக கிருபானந்த வாரியார் ஷ்வாமிகள்

திங்கள், 1 டிசம்பர், 2014

குறுங்கதை # 8 கண்ணே கண்மணியே- - -



பார்வையிழந்த அவளுக்கு ஒரே ஆதரவு அவளுடைய காதலன்தான்  அவன் காட்டிய அன்பு வளைத்திக்குமுக்காட வைத்தது. சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் தன் விருப்பத்தை அவனிடம் கூற தவருவதேயில்லை.

 ”உன்னை என்  உயிரின்மேலாக  காதலிக்கிறேன். நீயில்லாத வாழ்க்கையை  என்னால் கற்பனைபண்ணிகூட பார்க்கமுடியவில்லை.என் பெற்றோர்கள் கண் தானம் பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் .நிச்சயம் நான் இழந்த பார்வையைப் பெறுவேன். அக்கண்களால் உன்னைத்தான் முதலில் பார்க்கவிரும்புகிறேன். 

 நம்  வருங்காலம் பிரகாசமாக  தெரிகிறது. 
அதுவரை  நீ பொறுத்திருக்கவேண்டும், பின்  நம் திருமணம் செய்ய எந்த தடையுமிருக்காது” என்று கூறி மகிழ்ந்து காதலனையும் மகிழ்விப்பாள்..

அவள்  விரும்பியபடியே கண்கள் தானமாக கிடைத்தன,கண் பார்வையைப் பெற்ற அவள் தன் விருப்பப்படியே தன் காதலனை அருகில் அழைத்து கண்களைத்திறந்து அவனை ஆவலுடன் பார்த்தாள்.பேரதிர்ச்சியடைந்தாள்.அவன் காதலனும் பார்வையற்றவனாகவிருந்தான்.

பின்பு மருத்துவ மனையில் தன்னுடனிருந்த காதலனிடம் முன்போல் அன்புடனோ,நெருக்கமாகவோ பழகவில்லை.
வீடு திரும்பவிருந்த அன்று காதலனிடம் “ பார்வையற்றவளாக நான் அனுபவித்த துன்பத்தை பார்வைபெற்றபின்னும் பார்வையற்ற உங்களை மணந்துகொண்டு தொடர்ந்து அனுபவிக்க நான் விரும்பவில்லை.எனவே என்னை மன்னித்துவிடுங்கள்,.”என்று இரக்கமின்றி கூறியதைக்கேட்ட காதலன் செய்வதறியாது வேதனையுடன் அங்கிருந்து வெளியேறினான்.

கரைகாணா உற்சாகத்துடன்,வீடு திரும்பிய அவளுக்கு காதலனிடமிருந்து,ஒரு குறுஞ்செய்தி வந்தது. “இனியவளே,என் கண்களையாவது,உன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து நேசிப்பாய் என நம்புகின்றேன்”