வியாழன், 29 ஜனவரி, 2015

குறுங்கதை # 11 ஞானக்கண்



மருத்தவமனையில் இறுதி காலத்தை நெருங்கிக்கொண்டிருந்த இரு நோயாளிகள் ஒரு அறையில் படுக்கவைக்கப்பட்டிருந்தனர்,ஒருவர் தன் உடலை நகர்த்தக்கூட முடியாத நிலையிலிருந்தார்.அவர் விழித்திருக்கும்பொழுதெல்லாம் முகட்டைப் பார்த்தவாறு அமைதியற்று புலம்புவார்.மற்றொரு நோயாளி அந்த அறையின் ஜன்னல் அருகிலிருந்த படுக்கையில் படுத்திருந்தார். அவர் தன் சக நோயாளியின் புலம்பலைக்கேட்டு,மறு நாள் காலையில் அவரை அழைத்து, ஜன்னல் வழியாக தான் காணும் காட்சிகளை விவரித்தார்.

பொழுது புலரும் காலை வேளையில் தினசரி பேப்பர்களை லாகவமாக் வீட்டிற்குள் வீசியெரியும் பையனைப்பற்றி,வாசல் தெளித்து கோலமிடும் பெண்களின் கைவண்ணத்தைப்பற்றி,பால்காரன் பால் ஊத்தும் நேர்த்தியைப்பற்றி,நடை பயிலும் மக்களின் வயதுபற்றி அவர்கள் அணிந்திருந்த உடைகள் பற்றி,இன்னும் பல நிகழ்வுகளை சுவையாக விவரித்தார்.அதைக்கேட்டு மகிழ்ந்த நோயாளி தன் இயலாமை குறித்த கவலைகளை மறந்து இன்புற்றார்.,

ஜன்னல் அருகிலிருந்த நோயாளியும்,பக்கத்துப் படுக்கை நோயாளியின் வேண்டுகோளுக்கிணங்கி தினமும் காலையில் வீதியில் நடக்கும் நிகழ்வுகளை புத்துணர்ச்சியூட்டும் வகையில் விவரிப்பதை வழக்கிமாக்கிக் கொண்டார்.மற்றவரும் காலை புலராதா,என எங்குமளவிற்க்கு தினம் தினம் இந்த நேரடிக்காட்சிகளின் வருணணை தொடர்ந்தது.

அன்று காலை ஜன்னலோர நோயாளியிடமிருந்து வழக்கமாக கூறப்படும் வருணணை கேட்கவில்லை.என்னவாயிற்று என்று பதற்றபட்டவரிடம் செவிலியின் செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆம்,ஜன்னலோர நோயாளி அமைதியாக் தன் வாழ்க்கைப்பயணத்தை முடித்திருந்தார்.
மறைந்த நோயாளியை,அப்புறப்படுத்தினார்கள்.ஜன்னலோர காட்சிகளை விவரிப்பார் யாருமில்லை.

ஜன்னலோர நோயாளியின் மறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டு தானே அந்த படுக்கைக்கு மாற்றப்பட்டால் தன் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் தலை தூக்கி அக்காலைக் காட்சிகளை காணலாம் என்ற் முடிவிக்கு வந்தவ்ர் அவ்வாறே தன்னை ஜன்னலோர படுக்கைக்கு மாற்ற வேண்டினார். அவர் விருப்பப்படியே,அன்று இரவு ஜன்னலோர படுக்கைக்கு மாற்றப்பட்டார்.

விடிவை எதிர் நோக்கி காத்திருந்த நோயாளி விடிந்ததும் தன்னை வருத்தி சாய்ந்து தலை தூக்கி ஆவலுடன் ஜன்னல் வழியாக பார்த்தார்.அவர் கண்ட காட்சி ஏமாற்றத்தையளித்தென்பதைவிட ஆச்சரியத்தின் எல்லைக்கோட்டைத்தொட்டார் என்பதுதான் பொருத்தமாகவிருக்கும்.ஜன்னருகில் ஒர் உயர்ந்த சுவரிருந்தது

.அப்படியென்றால் மறைந்த நோயாளி விவரித்த காலைக்காட்சிகள்?
செவிலியிடம் இது பற்றி விசாரித்தபொழுது,இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது.ஜன்னலோர நோயாளி ஒரு பிறவிக்குருடர்.

காரண காரியங்களை அறிய முயற்ச்சி செய்யாது தன் சக நோயாளியின் மனித நேயத்தை வியந்து,தன் அகக் கண்களால் ஜன்னலோர நோயாளி விவரித்த காட்சிகளை விருப்பமேற்படும் பொழுதெல்லாம் கண்டு களித்து தன் மரணத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

நெய்வேலி மின்சாரமென்ன தண்ணீரா?






நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒரு மத்திய அரசின் நிறுவனம்.எனவே அது உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தென் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளது.


தமிழ் நாடும் மற்ற தென் மாநில மத்திய அரசின் மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறுகிறது.


இதில் வேடிக்கையென்னவென்றால்,மின்சாரப்பங்கீட்டில் பயனடையும் மாநிலங்களான,கேரளாவும்,கர்நாடகமும்,மின்சாரத்தைப் பெற்றுக்கொள்கிறதேதவிர கொடுப்பதில்லை
.

மத்திய அரசின் மின் நிலையங்கள் அங்கு இல்லாததுதான் அதற்கு காரணம் என்று சமாதானம் அடைந்தாலும்,ஒரு வேளை அவர்களிடம் மத்திய மின் நிலயங்கள் இருந்திருந்தால் இந்த பங்கீட்டு முறையை கடைப்பிடித்திருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியே !


கேரள, கர்நாடக அரசியல்வாதிகள் சட்டத்திற்க்கப்பார்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.அதனால்தான் அப்படியொரு சந்தேகம் ஏற்படுகிறது.


நெய்வேலி மின்சார உற்பத்தியையும் கேரள கர்நாடக நீர் உற்பத்தியையும் ஒப்பிட்டுப்பார்ப்போமானால்,நெஞ்சு வெடித்து விடும்.


நீர் வரத்து அம்மாநிலங்களுக்கு கிடைத்த இயற்கையின் கொடை .அவர்களின் பங்கு ஒன்றுமில்லை. பாதிப்பென்றால் அவைகள் அவ்ரகளால் சுயநலத்திற்காக வரவழைத்து கொண்டது.

 ஆற்றின் போக்கைத்தடுத்து அணை கட்டும்பொழுது அதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் வசித்த மக்கள் நிச்சயம் பாதிப்புக்குள்ளாயிருப்பார்கள். அம்மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவேயிருக்கும் ஏனெனில் அணைகள் அடர்ந்த காட்டுக்குளமைந்த காரணத்தால்.


.சுருங்கச்சொன்னால் பாதிப்பையுண்டாக்கி பெரும் பலனடைபவர்கள் கர்நாடகத்தினர்
..

கெட்ட எண்ணத்துடன் பெரிய அணையக்கட்டிக்கொண்டு அதற்கான நீரைப்பெற நூற்றாண்டுகாலமாகவுள்ள ஒரு அணையை இடிக்கத்துடிக்கிறார்கள் கேரளத்தவர்கள்.


நெய்வேலி மின்சாரமோ அனாதைகளாக்கப்பட்ட நூற்றக்கணக்கான கிராமங்களில் காலங்காலமாக வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் என்பதுதான் சோகமான உண்மை.


இயற்கையின் கொடைக்கு ஏகபோக உரிமை கொண்டாடும் கேரளத்தினருக்கும் கர்நாடகத்தினருக்கும் இந்த உண்மை ஒருவேளை தெரியாதோ,அல்லது மறைக்கப்பட்டிருக்குமோ என்றசந்தேகமேற்படுகிறது.

. ஏனென்றால்  மலையாளிகளும்,கன்னடிகர்களும் மனிதர்கள்தானே,!


 மனிதாபிமானமற்றவர்களாக இருக்கமுடியாது என்று சத்தியமாக நம்புகிறேன்..

புதன், 21 ஜனவரி, 2015

காவேரி பிரச்சினையின் ஊற்றுக்கண்








செப்டம்பர் 15 ம் நாளை தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளாக கொண்டாடுவது வழக்கம்.இதனை ஏற்க மனமில்லாத தமிழர்களுமுண்டு
.

ஆனால் அதே தினம்,மோக்ஷகுண்டம் விஷ்வேஷ்வரையா என்ற ஒரு பொறியாளரை போற்றும் வகையில்,அவர் பிறந்தநாளை கல்கத்தாவை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் இன்ஷ்டியூட் ஆப் எஞ்சீனியர்ஷ் எனும் அமைப்புப்பும் அதன் கிளைகளும் பொறியாளர்கள் தினமாக கொண்டாடும்
.
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலுள்ள ஐ இ கிளை அந்த நாளை கொண்டாடும்விதம் ஆச்சரியப்படும் வகையிலமைந்திருக்கும்.ஏனெனில் இந்த விழாவினை நடத்துவதில் முனைப்பாக செயல்படுவர்கள், கர்நாடகத்தைச்சேர்ந்த பொறியாளர்களே..


அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பமே விஷ்வேஷ்வரையாவின் துதியோடு ஆரம்பித்து,அவரின் வாழ்க்கை வரலாறு, அவர் படைத்த சாதனைகளென,ஒருவர் விலாவாரியாக எழுதிவைத்து பைபிளை வாசிப்பதுபோல் வாசிப்பார்.( கன்னட அமைப்பைபச்சேர்ந்த பொறியாளர்) இது வருஷா வருஷம் நடக்கும் தவிர்க்கமுடியாத சடங்கு.ஏனெனில் தலமையகத்தின் ஆணை.


 ஐ இ என அழைக்கப்படும் அமைப்புக்கு நாடுதழுவிய நூற்றுக்கணக்கான கிளைகளுண்டு.அவைகளனைத்திலும் இந்த சடங்கு எந்த அளவிற்க்கு கடைப்பிடிக்கப்படுகீறது என்பது பரிசீலிக்கப்படவேண்டியவொன்று.

.இந்தியாவில் எஞ்சினியர் என்றால் அது விஷ்வேஷ்வரையாதான் .இனி ஒருவர் அப்படி பிறக்கமுடியாது.என்ற தோரணையில் அன்றைய நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.


பல்லாண்டு காலமாக நடக்கும் இந்த கூத்தை அந்த  எஞ்சினியரியன் புகைப்படத்தை வைத்து அரங்கேற்றுவதுதான் வழக்கம்.சமீபகாலமாக அவுருக்கு ஒரு சிலை வைத்து ,ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் அவருக்கு மாலை மரியாதை செய்தபின்தான் மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த விஷ்வேஷ்வரையா இத்தகைய கௌரவத்திற்கு தகுதியானவரா? அதுவும் தமிழகத்திலுள்ள ஒரு நகரத்தில் நடைபெறுவது ஒரு நெருடலான விஷயம்.


இந்த மகானுபாவர் யாரென்று நினைக்கிறீர்கள்? இன்றைய காவேரி பிரச்சினையின் மூலகர்த்தாவே இவர்தான்.


கன்னம்பாடி அணை (கிருஷ்ணசாகர்) கட்டியது இவரது மகத்தான சாதனை.அதுவும் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணையும் மீறி அதிகக்கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தை உருவாக்கி (கல்லணைக்குப்பின் கட்டப்பட்ட இரண்டாவது தடுப்பு) தமிழக விவசாயத்தை முடக்கிய பெருமை இவரையே சாரும்
.அது மட்டுமல்ல இன்று கர்னாடக அரசியல்வாதிகள் தன்னிச்சையாக காவேரி நதியில் அணைகள் கட்டுவதும் ஒப்பந்தங்களின்படி ,தரவேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடுப்பது போன்ற எதேச்சதிகாரமான செயலகளுக்கெல்லாம் வழிகாட்டியாவர்.
.

ஆக தமிழர்களுக்கு வஞ்சகமிழைத்த ஒருவருக்கு தமிழ்நாட்டிலேயே சிலை வைத்துக்கொண்டாடும் தமிழர்களின் பெருந்தன்மையை என்ன சொல்லிப்பாராட்ட!

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

சிலைகள்



கோட்ஷேக்கு சிலையா ! கொதித்தெழுகின்றனர் ஒரு சாரார்.கோட்ஷே தேசத்தந்தையை கொலை செயதவர்.அப்படிப்பட்ட கொலைகாரருக்கு சிலை வைத்தால் சிவராசனுக்குகூட சிலை வைக்கவேண்டும்,சந்தடி சாக்கில் புகுகிறார் ஒருவர்.


முதலில் ஒருவருக்கு சிலை வைப்பதின் அவசியமென்ன.அதற்கு அவர் தகுதியானவர்தானா என்பன போன்ற கேள்விக்களுக்கு விடை தேடவேண்டும்.முடிவாக இது போன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டு முடிவெடுக்கவேண்டிய பொறுப்பு யாருக்கு? அதுஅரசாங்கமானாலும் ,அம்முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா.நிச்சயமாக எந்த ஒரு தலைவனும் விமரிசனத்துக்கப்பாற்பட்டவரல்ல.எனவே அது சமுதாயத்தின் ஒரு பகுதியினரால் ஏற்றுக்கொள்ளப்படாததாகவே இருக்கும்.


வேடிக்கையென்னவென்றால் சிலை வைப்பது பிரச்சினையாவது அச்சிலை பொது இடத்தில்,அதுவும்சாலைச்சந்திப்புக்களில் ,சாலையோரங்களில் வைக்கக்கோரும்பொழுதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களின் கவனத்தை கவரவேண்டுமென்று (சுயநலமின்றி,நம்புங்கள்) அவர்களின் நடமாட்டங்களையே தள்ளாடவைக்கும் இவர்களை மனிதாபிமானமுள்ளவர்கள் என்று கருதமுடியுமா.


தங்கள் தலைவனை தெய்வமாக கொண்டாடட்டும்,அவருக்கு சிலை வைக்கட்டும்.அது தொண்டர்களின் வீட்டுக்கூரையாகவோ, தோப்போ தோட்டமாகவிருக்கட்டுமே.யார் அதில் தலையிடப்போகிறார்கள்.


சிலைகளால் இந்த நாட்டிற்கு என்ன நன்மைகளேற்பட்டுவிட்டன. சண்டையும் சச்சர்வும்தான் கைமேல் கண்ட பலன்.


முற்போக்கு சிந்தனையுள்ள ஒரு ஆட்சியமைந்து ,பொதுவிடங்களிலிருக்கின்ற  எல்லா சிலைகளையும் நீக்கவேண்டும்,போக்குவரத்துக்கழகத்தில் தலைவர்களின் பெயரகளை நீக்கியதுபோல.

சனி, 17 ஜனவரி, 2015

இடைத்தேர்தல்



ஆசிரியருக்கு கடிதம்.பதிவர்களின் இடுகைகள்,இவைகளின் ஒற்றுமை வேறுபாடுகளை கவனித்தால்,கவருமளவுக்கு ஒன்றுமில்லை என தோன்றுகிறது.ஆசிரியருக்கு கடித்த்தை நிராகரிக்கும் உரிமையுண்டு,அதேபோல் பதிவருக்கு பின்னூட்டங்களை நிராகரிக்கும் உரிமையுண்டு.

இந்த முன்னுரையின் அவசியத்தை இவ்விடுகையை வாசித்தீர்களாயின் உணர்வீர்கள்.

இடைத்தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கிறது.ஆளுங்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் அந்ததொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.இது கட்சியின் ஆணை.

எனக்குள்ள சந்தேகம் என்னவென்றால்.இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் “உங்களுக்கு இதுதான் வேலையா”என்று கேட்கமாட்டார்களா?

அதை விடுங்கள்,இந்த தேர்தல் நடக்காமலிருந்தால் நாட்டுக்கு என்ன நஷ்டமேற்பட்டுவிடும்?

நிதி பற்றாக்குறை என்று புலம்பும் ஆட்சியாளர்களுக்கு இது அனாவசிய செலவு என்று தோன்றவில்லையா?

ஒரு மாவட்டத்தின் மற்றைய வளர்ச்சிப்பணிகளின் கதி என்னாவது.?

இதுவும் ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கூத்தா,அல்லது அக்கிரமமா?

எனக்கு கேட்கும் உரிமையுண்டென்ற தைரியத்தில் எழ்துகிறேன்.