புதன், 21 ஜனவரி, 2015

காவேரி பிரச்சினையின் ஊற்றுக்கண்








செப்டம்பர் 15 ம் நாளை தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளாக கொண்டாடுவது வழக்கம்.இதனை ஏற்க மனமில்லாத தமிழர்களுமுண்டு
.

ஆனால் அதே தினம்,மோக்ஷகுண்டம் விஷ்வேஷ்வரையா என்ற ஒரு பொறியாளரை போற்றும் வகையில்,அவர் பிறந்தநாளை கல்கத்தாவை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் இன்ஷ்டியூட் ஆப் எஞ்சீனியர்ஷ் எனும் அமைப்புப்பும் அதன் கிளைகளும் பொறியாளர்கள் தினமாக கொண்டாடும்
.
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலுள்ள ஐ இ கிளை அந்த நாளை கொண்டாடும்விதம் ஆச்சரியப்படும் வகையிலமைந்திருக்கும்.ஏனெனில் இந்த விழாவினை நடத்துவதில் முனைப்பாக செயல்படுவர்கள், கர்நாடகத்தைச்சேர்ந்த பொறியாளர்களே..


அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பமே விஷ்வேஷ்வரையாவின் துதியோடு ஆரம்பித்து,அவரின் வாழ்க்கை வரலாறு, அவர் படைத்த சாதனைகளென,ஒருவர் விலாவாரியாக எழுதிவைத்து பைபிளை வாசிப்பதுபோல் வாசிப்பார்.( கன்னட அமைப்பைபச்சேர்ந்த பொறியாளர்) இது வருஷா வருஷம் நடக்கும் தவிர்க்கமுடியாத சடங்கு.ஏனெனில் தலமையகத்தின் ஆணை.


 ஐ இ என அழைக்கப்படும் அமைப்புக்கு நாடுதழுவிய நூற்றுக்கணக்கான கிளைகளுண்டு.அவைகளனைத்திலும் இந்த சடங்கு எந்த அளவிற்க்கு கடைப்பிடிக்கப்படுகீறது என்பது பரிசீலிக்கப்படவேண்டியவொன்று.

.இந்தியாவில் எஞ்சினியர் என்றால் அது விஷ்வேஷ்வரையாதான் .இனி ஒருவர் அப்படி பிறக்கமுடியாது.என்ற தோரணையில் அன்றைய நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.


பல்லாண்டு காலமாக நடக்கும் இந்த கூத்தை அந்த  எஞ்சினியரியன் புகைப்படத்தை வைத்து அரங்கேற்றுவதுதான் வழக்கம்.சமீபகாலமாக அவுருக்கு ஒரு சிலை வைத்து ,ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் அவருக்கு மாலை மரியாதை செய்தபின்தான் மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த விஷ்வேஷ்வரையா இத்தகைய கௌரவத்திற்கு தகுதியானவரா? அதுவும் தமிழகத்திலுள்ள ஒரு நகரத்தில் நடைபெறுவது ஒரு நெருடலான விஷயம்.


இந்த மகானுபாவர் யாரென்று நினைக்கிறீர்கள்? இன்றைய காவேரி பிரச்சினையின் மூலகர்த்தாவே இவர்தான்.


கன்னம்பாடி அணை (கிருஷ்ணசாகர்) கட்டியது இவரது மகத்தான சாதனை.அதுவும் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணையும் மீறி அதிகக்கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தை உருவாக்கி (கல்லணைக்குப்பின் கட்டப்பட்ட இரண்டாவது தடுப்பு) தமிழக விவசாயத்தை முடக்கிய பெருமை இவரையே சாரும்
.அது மட்டுமல்ல இன்று கர்னாடக அரசியல்வாதிகள் தன்னிச்சையாக காவேரி நதியில் அணைகள் கட்டுவதும் ஒப்பந்தங்களின்படி ,தரவேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடுப்பது போன்ற எதேச்சதிகாரமான செயலகளுக்கெல்லாம் வழிகாட்டியாவர்.
.

ஆக தமிழர்களுக்கு வஞ்சகமிழைத்த ஒருவருக்கு தமிழ்நாட்டிலேயே சிலை வைத்துக்கொண்டாடும் தமிழர்களின் பெருந்தன்மையை என்ன சொல்லிப்பாராட்ட!

கருத்துகள் இல்லை: