வியாழன், 1 ஜனவரி, 2015

குறுங்கதை # 10 செல்வந்தர்க்கழகு - - - ! !




கேரள கடற்கரையோரம் ஒரு மீனவன்,பீடி குடித்துக்கொண்டிருந்தான், அங்குவந்த  செல்வந்தர் வேலை வெட்டியில்லாமல் வீண் பொழுது போக்குகிறாயா என்று அதிகார தோரணையில் கேட்டார்.மீனவனும் மரியாதையுடன் “ இன்றைக்கு வேண்டிய மீன்களை பிடித்து விற்று வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொடுத்துவிட்டு ஒய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றான்“பொழுது  இருப்பதால்  மேலும்  மீன்களைப் பிடிக்கவேண்டியதுதானே” என்றார்.செல்வந்தர்.
“பிடித்து என்ன செய்ய”
“அவைகளை விற்று பணமாக்கலாமே”
“பின்பு”
“அந்த பணத்தை வைத்து பல படகுகளுக்கு சொந்தக்காரனாகலாமே”
“பின்பு”
“விசைப் படகு வாங்கி ஆழ் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் தொழிலை விரிவுபடுத்தி பலருக்கு வேலை கொடுத்து என்னைப்போல் செல்வந்தனாகலாமே”
“பின்பு”
“நிம்மதியாக வீட்டிலமர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கலாமே”
“நான் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன்”
செல்வந்தர் வாயாடைத்து நின்றார்.
மிகுந்த செல்வமுடையவர்  செல்வந்தரல்லர், மிகுந்த செல்வத்தின் தேவையற்றவனே  செல்வந்தன்.



கருத்துகள் இல்லை: