நெய்வேலி பழுப்பு
நிலக்கரி நிறுவனம் ஒரு மத்திய அரசின் நிறுவனம்.எனவே அது உற்பத்தி செய்யும் மின்சாரத்தை
தென் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளது.
தமிழ் நாடும் மற்ற
தென் மாநில மத்திய அரசின் மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறுகிறது.
இதில் வேடிக்கையென்னவென்றால்,மின்சாரப்பங்கீட்டில்
பயனடையும் மாநிலங்களான,கேரளாவும்,கர்நாடகமும்,மின்சாரத்தைப் பெற்றுக்கொள்கிறதேதவிர
கொடுப்பதில்லை
.
மத்திய அரசின்
மின் நிலையங்கள் அங்கு இல்லாததுதான் அதற்கு காரணம் என்று சமாதானம் அடைந்தாலும்,ஒரு
வேளை அவர்களிடம் மத்திய மின் நிலயங்கள் இருந்திருந்தால் இந்த பங்கீட்டு முறையை கடைப்பிடித்திருப்பார்களா
என்பது மில்லியன் டாலர் கேள்வியே !
கேரள, கர்நாடக
அரசியல்வாதிகள் சட்டத்திற்க்கப்பார்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.அதனால்தான்
அப்படியொரு சந்தேகம் ஏற்படுகிறது.
நெய்வேலி மின்சார
உற்பத்தியையும் கேரள கர்நாடக நீர் உற்பத்தியையும் ஒப்பிட்டுப்பார்ப்போமானால்,நெஞ்சு
வெடித்து விடும்.
நீர் வரத்து அம்மாநிலங்களுக்கு
கிடைத்த இயற்கையின் கொடை .அவர்களின் பங்கு ஒன்றுமில்லை. பாதிப்பென்றால் அவைகள் அவ்ரகளால்
சுயநலத்திற்காக வரவழைத்து கொண்டது.
ஆற்றின் போக்கைத்தடுத்து அணை கட்டும்பொழுது அதன்
நீர்ப்பிடிப்பு பகுதியில் வசித்த மக்கள் நிச்சயம் பாதிப்புக்குள்ளாயிருப்பார்கள். அம்மக்களின்
எண்ணிக்கை மிகக்குறைவாகவேயிருக்கும் ஏனெனில் அணைகள் அடர்ந்த காட்டுக்குளமைந்த காரணத்தால்.
.சுருங்கச்சொன்னால்
பாதிப்பையுண்டாக்கி பெரும் பலனடைபவர்கள் கர்நாடகத்தினர்
..
கெட்ட எண்ணத்துடன்
பெரிய அணையக்கட்டிக்கொண்டு அதற்கான நீரைப்பெற நூற்றாண்டுகாலமாகவுள்ள ஒரு அணையை இடிக்கத்துடிக்கிறார்கள்
கேரளத்தவர்கள்.
நெய்வேலி மின்சாரமோ
அனாதைகளாக்கப்பட்ட நூற்றக்கணக்கான கிராமங்களில் காலங்காலமாக வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான
மக்களின் கண்ணீர் என்பதுதான் சோகமான உண்மை.
இயற்கையின் கொடைக்கு
ஏகபோக உரிமை கொண்டாடும் கேரளத்தினருக்கும் கர்நாடகத்தினருக்கும் இந்த உண்மை ஒருவேளை
தெரியாதோ,அல்லது மறைக்கப்பட்டிருக்குமோ என்றசந்தேகமேற்படுகிறது.
. ஏனென்றால் மலையாளிகளும்,கன்னடிகர்களும்
மனிதர்கள்தானே,!
மனிதாபிமானமற்றவர்களாக இருக்கமுடியாது என்று சத்தியமாக நம்புகிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக