இன்று மாட்டுப்பொங்கல்.என்னதான்
கூவிக்கூவி திருவள்ளுவர் தினம் எனறு கொண்டாடினாலும்,மக்களைப்பொருத்தமட்டில் நேற்று
தைப்பொங்கல் இன்று மாட்டுப்பொங்கல்தான்.
இன்றைய சிறப்பம்சமே,மஞ்சுவிரட்டுதான்.ஒவ்வொரு
கிராமத்திலிமுள்ள மாடுகளை குளிப்பாட்டி,கொம்பு சீவி வர்ணம் பூசி மந்தை வாடி வாசலிலிருந்து
துள்ளி வரும் அந்த கதாநாயக/நாயகிகைளை கண்டு களித்த நாட்கள் நினைவில் நின்று நீங்காதன.
மாடு துரத்தல்,மஞ்சு
விரட்டல் என்றவைகள்,என்று ஜல்லிகட்டு என்று நாமகரணம் சூடப்பட்டு வீரவிளையாட்டு என்று விளம்பரப்படுத்தபட்டதோ. அன்றே பிடித்தது சனியன்.
அதிலும் நாற்பதுகளில்
அனாமதேயமாகவிருந்த சில கிராமங்கள் ப்ரபல்யமானதை சிலரால் ஜீரணிக்கமுடியவில்லை எனவேதான் ,அந்தவொரு
கிராமிய பொழுது போக்கு சாதி வெறி, அரசியல் சித்து வலைகளுக்குள் சிக்கிச்சீரழிந்து
கிடக்கிறது
.குறிப்பாக வீரவிளையாட்டு
என்ற சொல்லே ஒரு தரப்பினரின் வெறுப்புக்கும் கேலிக்கும் உட்படுத்தப்பட்டு ஜல்லிகட்டு
கேவலப்பட்டுக்கிடக்கிறது.
பாமரமக்களின் பாரம்பரியத்தை காப்பாற்ற விரும்பினால்,ஜல்லிகட்டை
காட்சிப்பொருளாக தம்பட்டமடிக்காமல்,அவ்வவூரின் சொந்த பந்தங்களுக்கான சடங்காக,சாமிகும்பிடும்
சம்ப்ரதாயமாக மாற்றி கொண்டாடினால் ஒரு வேளை பிரச்சினைக்குத்தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு நூற்றுக்கணக்காண
கிராம .எளியமக்கள் இன்புறுவார்கள்.
3 கருத்துகள்:
நூற்றுக்கணக்காண கிராம .எளியமக்கள் இன்புறுவார்கள்.---- உண்மைதான் அய்யா......
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஜல்லிக்கட்டு குறித்து அருமையாக அழகாக அலசியிருக்கிறீர்கள்
நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பு என்பது உண்மையே
இதை அரசாங்கம் நிறுத்த நினைப்பதைவிட மக்களே நிறுத்த முன் வரவேண்டும் என்பதே எனது எண்ணம்.
தங்களுக்கு எனது திருவள்ளுவர் தின வாழ்த்துகளும்,மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகளும்
தங்களுக்கு நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும் தங்களது இணைப்பில் இணைத்துக்கொண்டேன் இனி தொடர்வேன்...
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
வலிப்போக்கன் அவர்களுக்கும்,தேவகோட்டையாருக்கும் நன்றி
கருத்துரையிடுக