சனி, 17 ஜனவரி, 2015

இடைத்தேர்தல்



ஆசிரியருக்கு கடிதம்.பதிவர்களின் இடுகைகள்,இவைகளின் ஒற்றுமை வேறுபாடுகளை கவனித்தால்,கவருமளவுக்கு ஒன்றுமில்லை என தோன்றுகிறது.ஆசிரியருக்கு கடித்த்தை நிராகரிக்கும் உரிமையுண்டு,அதேபோல் பதிவருக்கு பின்னூட்டங்களை நிராகரிக்கும் உரிமையுண்டு.

இந்த முன்னுரையின் அவசியத்தை இவ்விடுகையை வாசித்தீர்களாயின் உணர்வீர்கள்.

இடைத்தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கிறது.ஆளுங்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் அந்ததொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.இது கட்சியின் ஆணை.

எனக்குள்ள சந்தேகம் என்னவென்றால்.இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் “உங்களுக்கு இதுதான் வேலையா”என்று கேட்கமாட்டார்களா?

அதை விடுங்கள்,இந்த தேர்தல் நடக்காமலிருந்தால் நாட்டுக்கு என்ன நஷ்டமேற்பட்டுவிடும்?

நிதி பற்றாக்குறை என்று புலம்பும் ஆட்சியாளர்களுக்கு இது அனாவசிய செலவு என்று தோன்றவில்லையா?

ஒரு மாவட்டத்தின் மற்றைய வளர்ச்சிப்பணிகளின் கதி என்னாவது.?

இதுவும் ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கூத்தா,அல்லது அக்கிரமமா?

எனக்கு கேட்கும் உரிமையுண்டென்ற தைரியத்தில் எழ்துகிறேன்.

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நியாயமான கேள்விதான் ஐயா
நேற்றைய எனது கருத்தை நீக்கி விட்டீர்களோ?

அன்பே சிவம் சொன்னது…

மற்றவர்கள் எப்படியோ அய்யா உங்கள் தளத்தை பொறுத்தவரை நான் 10 ஓடு 11 தொடருங்கள்..

Andichamy சொன்னது…

தேவகோட்டையாருக்கு,அந்த பாவத்தை செய்பவனல்ல நான்.கருத்து வேறுபாட்டை கடுமையாக முன்வைத்தாலும்,அதை நாகரிகமாக அனுக பழகியவன்.

Andichamy சொன்னது…

மிக்க நன்றி அன்பே சிவம் அவர்களே.