கோட்ஷேக்கு
சிலையா ! கொதித்தெழுகின்றனர் ஒரு சாரார்.கோட்ஷே தேசத்தந்தையை கொலை செயதவர்.அப்படிப்பட்ட
கொலைகாரருக்கு சிலை வைத்தால் சிவராசனுக்குகூட சிலை வைக்கவேண்டும்,சந்தடி சாக்கில் புகுகிறார்
ஒருவர்.
முதலில்
ஒருவருக்கு சிலை வைப்பதின் அவசியமென்ன.அதற்கு அவர் தகுதியானவர்தானா என்பன போன்ற கேள்விக்களுக்கு
விடை தேடவேண்டும்.முடிவாக இது போன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டு முடிவெடுக்கவேண்டிய
பொறுப்பு யாருக்கு? அதுஅரசாங்கமானாலும் ,அம்முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா.நிச்சயமாக
எந்த ஒரு தலைவனும் விமரிசனத்துக்கப்பாற்பட்டவரல்ல.எனவே அது சமுதாயத்தின் ஒரு பகுதியினரால்
ஏற்றுக்கொள்ளப்படாததாகவே இருக்கும்.
வேடிக்கையென்னவென்றால்
சிலை வைப்பது பிரச்சினையாவது அச்சிலை பொது இடத்தில்,அதுவும்சாலைச்சந்திப்புக்களில் ,சாலையோரங்களில்
வைக்கக்கோரும்பொழுதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களின் கவனத்தை கவரவேண்டுமென்று (சுயநலமின்றி,நம்புங்கள்)
அவர்களின் நடமாட்டங்களையே தள்ளாடவைக்கும் இவர்களை மனிதாபிமானமுள்ளவர்கள் என்று கருதமுடியுமா.
தங்கள்
தலைவனை தெய்வமாக கொண்டாடட்டும்,அவருக்கு சிலை வைக்கட்டும்.அது தொண்டர்களின் வீட்டுக்கூரையாகவோ, தோப்போ
தோட்டமாகவிருக்கட்டுமே.யார் அதில் தலையிடப்போகிறார்கள்.
சிலைகளால்
இந்த நாட்டிற்கு என்ன நன்மைகளேற்பட்டுவிட்டன. சண்டையும் சச்சர்வும்தான் கைமேல் கண்ட
பலன்.
முற்போக்கு
சிந்தனையுள்ள ஒரு ஆட்சியமைந்து ,பொதுவிடங்களிலிருக்கின்ற எல்லா சிலைகளையும் நீக்கவேண்டும்,போக்குவரத்துக்கழகத்தில்
தலைவர்களின் பெயரகளை நீக்கியதுபோல.
1 கருத்து:
முற்போக்கு சிந்தனையுள்ள ஒரு ஆட்சியமைந்து ,பொதுவிடங்களிலிருக்கின்ற எல்லா சிலைகளையும் நீக்கவேண்டும்,போக்குவரத்துக்கழகத்தில் தலைவர்களின் பெயரகளை நீக்கியதுபோல.....
கருத்துரையிடுக