தீக்குள்
விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா-மகாகவி சுப்ரமணிய பாரதியார்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா-மகாகவி சுப்ரமணிய பாரதியார்
நெய்வேலி பழுப்பு
நிலக்கரி நிறுவனம்,(NLC) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட ஆரம்பித்தபோது,அதன்
முதல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்,ஓரு ஐ சி எஷ்அதிகாரி.அவரும்,மேல்மட்ட அதிகாரிகள்
பலரும்,ஐம்பது வயதை தாண்டிய,மாநில அதிகாரிகள்.
பிரிட்டிஷ்ஆட்சியில்கொட்டைபோட்டவர்கள்,அவர்களுடையஅணுகுமுறை
வெள்ளக்காரன்வாக்குவேதவாக்குஎன்றுதானிருந்தது,இவ்வணுகுமுறை
,எங்களைப்போன்றஇளந்தலைமுறையினருக்குஏற்ப்புடையாதாகவில்லை
.எனவே,இருதரப்பினருக்குமிடையிலானமோதல்கள்அன்றாட
நிகழ்வுகளாவிருந்தன,சுதந்திர இந்தியா தொழில்மயமாக்களில் ஐரோப்பியர்களையே பெரிதும் சார்ந்திருந்தது. NLC யின் கட்டமைப்பு பணிகளை திட்டமிடுதலிருந்து அனைத்து தொழிற்சாலைகளும் இயங்குவரை PDTS என்ற ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.அவர்கள் தங்கள் பணிகளை முடித்தும்,நமது அதிகாரிகள் பொறுப்பேற்றார்கள். இருப்பினும் ஆலோசகர்களாக வெள்ளையர்கள் தொடர்ந்து கோலோச்சினார்கள்.

சுரங்கத்திர்க்கும்
ஒரு ஆலோசகரிருந்தார். (ஓப்பி) இவர் PDTS ன் ஆள்.இவரைப்பற்றி பெருமையாக பேச ஒன்றுமில்லை,வெள்ளைக்காரன்
என்பதைத்தவிர.
ஒரு நாள் இவர்
எம் டி யுடன் ஆய்வுமேற்கொள்ள வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.நான் பணியாற்றிய இயந்திரம்(Bucket
Wheel Excavator-BWE 1145) மேல்தளத்தில்,நுழைவு வாயிலுக்கருகாமையில் இருந்தது அன்று.சுரங்கமே
பரபரப்பாகவிருந்தது.எம் டி வருவதர்க்குமுன்னதாகவே,சுரங்க அதிகாரிகள் வரிசை வரிசையாக
வந்தனர்.
எம் எம் ஒனனென(Executive
Engineer/ Mechanical/Mines1) அறியப்பட்ட(உமாபதி) எனது பணிமுதல்வர் ,அகழ்வானுக்கு வந்தார்,நிலமை
பரிதாபத்துக்குரியது.கொடுத்த வரைபடத்தின்படி அகழவேண்டிய பகுதி முடிந்திருந்தபடியால்,வி
ஐ பி க்கள் வரும்போது,அகழ்வானை(Bucket Wheel Excavator) எப்படியாவது கொஞ்ச நேரமாவது இயக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தினால்,அதனை வேறொரு இடத்திர்க்கு நகர்த்தி,சோதனை பார்த்து,திருப்தியடைந்து காத்திருந்தேன்.அகழ்வானின் புதிய நிலைப்பாட்டைப்பார்த்த எம் எம் ஒன், அதிர்ச்சியடைந்து,என்ன சொல்லியும் கேளாமல்,
வரைபடத்திலுள்ள இடத்திற்க்கு நகர்த்தி
இயக்கச் சொன்னார்,அவர் விரும்பியபடி செய்தும் பலனில்லாமைகண்டு மறுபடியும்,அவர் வந்தபோது இருந்த இடத்திற்க்கு நகர்த்தி,காத்திருந்தோம்..
இயக்கச் சொன்னார்,அவர் விரும்பியபடி செய்தும் பலனில்லாமைகண்டு மறுபடியும்,அவர் வந்தபோது இருந்த இடத்திற்க்கு நகர்த்தி,காத்திருந்தோம்..
ஜீப்களின் ஹார்ன்
சத்தம் கேட்டவுடன்,அகழ்வானை ஓடவிட்டோம்.அள்ளவேண்டிய எந்திரம் கிள்ளி மண்ணை தூவிக்கொண்டிருந்தது.வந்தாரையா
தொரை,மாறுபட்ட முறையில் நிறுத்தப்பட்டு ஓடிக்கொண்டிருந்த அகழ்வானைப்பார்த்ததும் ,அவர் முகத்தில்
எள்ளும் கொள்ளும் வெடித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.கொஞ்சநேரம், எம் டி யுடன கசமுசவென பேசிவிட்டு,
உமாபதியிடம்,மாறுதலைசுட்டிக்காட்டி,”இதையாரைக்கேட்டுசெய்தீர்கள்
என்றதோடல்லாமல்,வரைபடத்தில் காண்பித்த இடத்திற்க்கு,அகழ்வானை நகர்ததி இயக்க வற்புறுத்தினார்..சூடுபட்ட பூனையான எம் எம் ஒன்,அதிலுள்ள சாதக பாதகங்களை விளக்கியும்,ஆலோசகர்,பிடிவாதமாகவிருந்தார் வாக்குவாதம் சூடுபிடித்து இருவரும் கட்டிப்பிடித்து உருளாதவொன்றே குறையாக, போராடிக்கொண்டிருந்தனர்.நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாலும், என் தலைதான்(Chief Operating Engineer-BWE 1145) உருண்டுகொண்டிருந்தது,என் செயலை ஞாயப்படுத்தி,ஆவேசமாக வாதாடி,அகழ்வானை நகர்த்தாமல்,சுரண்டிக்கொண்டிருந்தோ.ம்.
எம் எம ஒன், அனுபமிக்க மூத்த பொறியாளரரென்பது அனைவருக்கும் தெரியுமாகையால்,அவரைப்பகைத்துக்கொள்ள வெள்ளைக்காரனுக்கும் விருப்பமில்லாததால் அத்தோடு முடித்திக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்

சில நாட்கள் கழித்து,
எம் எம் ஒன் என்னை அவர் அலுவலகத்து வருமாரு செய்தி அனுப்பினார்.அதன்படி சென்றேன்,அவர்
ஒன்றும் பேசவில்லை.இருக்கமாகவிருந்தார்.மாலை 6 மணியளவில்,என்னையும் அழைத்துக்கொண்டு,தலைமையலுவலகம்
சென்றார்.அங்கு சென்றபின்தான் ,எம் டிதலைமையில் வாரந்திர
ஆய்வுக்கூட்டம் (Weekly Review Meeting) நடக்கவிருக்கிறதென்றும்.மேலும்,தொரை சில நாட்களுக்குமுன்
சுரங்கத்தில் நடந்ததை ஒரு கௌரவ பிரச்சனையாக்கியிருக்கிறாரென்றும்,அது குறித்து, கூட்டத்தில்
விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.அப்பொழுது,என் மனநலை எப்படியிருந்திருக்குமென
சொல்லவாவேண்டும்.
கூட்டத்தில் என்ன
நடந்தது என்பதை பார்க்குமுன்,அன்றைய நிர்வாகமுறை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டும்.எம்
டி முன்பே குறிப்பிட்டபடி,ஒரு ஐ சி எஸ் அதிகாரி ( TMS மணி ).நெய்வேலி பழுப்பு நிலக்கரி
நிருவனத்தின்,சர்வ அதிகாரமுடைய,மாநில அதிகாரி.முதல்மந்திரியின் நம்பிக்கைக்குரியவர்..
அவர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மூத்த அதிகாரிகள்தான் கலந்துகொள்வார்கள்.அதிகாரவர்க்கத்தின்
அடிமட்டத்திலுள்ள என்னை அங்கு வரச்சொல்லியிருக்கிரார்களென்றால்,நான் பலிகடா ஆகப்போகிறேன்
என்றுதானே அர்த்தம்.
கூட்டம் நடந்த
அறையில் அனைவரும் பவ்யமக அமர்ந்திருந்தார்கள்.எனக்கென்னவோ,அறையில் நுழைந்ததும் ஒரு
அசாத்திய தைரியமேற்பட்டது.25 வயது இளைஞன்,மூன்றாண்டுக்குமேலாக மாநில மின்வாரியத்தில்
பணியாற்றிய அனுபவம்.இளங்கன்று பயமறியாது,என்ற மனோபாவம்,நிகழ்வன்று நான் எடுத்தமுடிவின்மீதான
ஆழ்ந்த நம்பிக்கை, என்பனபோன்ற சாதக அம்சங்களை மனதில்கொண்டும்,எனது பணிமுதல்வர் என்னைக்கைவிடமாட்டாரென்ற
நம்பிக்கையோடும் அமர்ந்திருந்தேன்.
கூட்டமென்னவோ என்
சமாச்சாரத்தை விவாதிக்கவே கூட்டப்பட்டதுபோல்,எம் டி எடுத்த எடுப்பிலேயே,சுரங்க நிகழ்வைப்பற்றி,நினைவுபடுத்தி,ஆலோசகரின்
(வெள்ளைக்காரனின்) அதிருப்தியை தெரியபடுத்திவிட்டு,எம் எம் ஒன்னைப்பார்த்து, உங்கள்
பதிலென்னவென்று கேட்டார்.எம் டி யின் பேச்சும்,கேள்வியும் ஒரு சம்பிரதாய தோரணையில்
வெள்ளைக்காரனை திருப்திபடுத்தவேஅமைந்திருந்ததை அனைவராலும் உணரமுடிந்தது. எனது பணிமுதல்வர் பதில் ஒரு மூத்த தொழில்முறையாளனின்(Professional) வாதத்திறமையை வெளிக்கொணர்ந்தது..பொறுமையாக
கேட்டபின், அவரருகிலமர்ந்த என்னைப்பார்த்தார்,உமாபதி என்னை தட்டினார்,எழுந்து நின்றேன். எம்
டி என்னை ,கூர்மையாக பார்த்துவிட்டு,(Youngman, Follow the instructions
scrupulously.,------You can go.) பொடியனே,,சொன்னபடி வேலை செய்,அதிகப்பிரசங்கிதனமாக
நடந்துகொள்ளாதே என்று கூறியதுபோலிருந்தது.அப்பாட விட்டதுடா----என்று அசைபோட்டுக்கொண்டு
நடையைக்கட்டினேன்.
இப்பச்சொல்லுங்க,தீக்குள்
விரல்விட்ட இன்பமென்பது இதன்றி வேறென்னவாகவிருக்க முடியும்.
சுரங்க நிகழ்வின்
பின்புலமாக ஒரு வர்க்க போராட்டமிருந்தது தனிக்கதை.பின்பொருமுறை பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக