கணினியின்மீதான மோகம் உண்டானது எனது 65 வது வயதில்.இதை சந்த்ரபாபு நாயுடு எஃபக்ட் என்றுதான் கூறவேண்டும்.நான் பணிபுரிந்த நிறுவனத்தில் 80 களிலேயே கணினி அறிமுகமாயிருந்தாலும்,ஏனோ அதன் மீது ஈற்புக்கு பதிலாக ஒரு வெறுப்புத்தானுண்டு.
அவ்வெறுப்பு,ஏதோ கொள்கையளவிளானது என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்.கணினிமயமாக்குதலை அறிமுகப்படுத்தபட்ட முறை அனுபவசாலிகளின் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.நானும் அதற்க்கு விதிவிலக்கல்ல.அதிகாரவர்க்கத்தினர் கையாளும் அடாவடித்தனங்களில் ஒன்று,ஒருவனையோ அல்லது அடக்கமுடியாத அனுபசாலிகளையோ அவமானப்படுத்தி தன்னை கொம்பன் என்று பறைசாற்றிக்கொள்வது..அந்தவகையில் குரூரமானது, ஒரு அனுபவமோ தகுதியோ இல்லாத ஒருவனை,அதிலும் இளைஞனை வெளீயிலிருந்து கொண்டுவந்து புதிய துறையின் தலைமையில் அமர்த்தி,இந்திரன் சந்திரன் என்று கொண்டாடினால் புதியவன்மீதும்,அவனை இறக்குமதிசெய்தவரிடமும்,அந்த துறையின்மீதும் வெறுப்பேற்படுவது இயற்கைதானே.மேலும்,ஆர்வமிருந்தாலும்,அதை(கணினிபற்றி) கற்றுதரக்கூடிய சம் வயதினரோ மூத்தவர்களோ இல்லாததால் முயற்சி செய்யவேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.ஓய்வுபெற்றபின்,எந்தவித மனத்தடங்களுமின்றி.பாலபாடத்திலிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்,அதுவும் வெளி ஊராகவிருந்ததால்(,ஹைதராபாத்)பயணம் சுகமாயிருந்ததுமட்டுமல்ல,கணினி பைத்தியமாகிவிட்டேன் என்றால் மிகையாகாது.பிறகென்ன.15 ஆண்டுகளில்,மின் புத்தகங்கள்,சங்கீதம்,ஃபேஷ்புக்,ட்விட்டர் என்று தாவித்தாவி தற்பொழுது வலைப்பதிவுகளில் ஒரு ஈர்ப்பேற்பட்டு,மேயும்பொழுதுதான்,திண்டுக்கல் தனபாலின் அழைப்பை பார்த்தேன்,வலைப்பதிவாளராகிவிடுவது என்று முடிவெடுத்து,ஒரு வழியாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிவிட்டேன்,(எங்க ஊர்க்காரர் யோசனைக்கு மதிப்பு கொடுக்கவேண்டாமா)இனி என்ன எல்லா கிழடுகளும் போல் பழங்கதை சொல்ல்ப்போகிறேன்,முடிந்தால் கேளுங்க/படிங்க.உபயோகரமாகவிருக்கும் என்று நினைக்கிறேன்.நெய்வேலி கதையாகத்தானிருக்கும!

4 கருத்துகள்:
வணக்கம்...
உங்களின் அனுபவங்கள் பலருக்கும் பாடமாகவும், பொக்கிசமாகவும் இருக்கலாம்... தொடருங்கள் ஐயா... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
நன்றி திரு தனபாலன்.
உங்கள் வலைத் தளத்திற்கு வந்து பார்த்தேன். சிறப்பாக தொடங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! தொடருகின்றேன்!
நன்றி தி.தமிழ் இளங்கோ.
கருத்துரையிடுக