செவ்வாய், 14 அக்டோபர், 2014

லிக்னைட்டை தொட்டுவிட்டோம்





நெய்வேலி மின்சாரம் உங்கள் சொடுக்குக்காக வீட்டில் காத்திருக்கிறதல்லவா,அப்படியென்றால் அதன் வரலாற்றை கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே..
19 ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே தமிழக கடற்கரை மாவட்டங்களில் Lignite (பழுப்பு நிலக்கரி) இருப்பது அறியவந்தது.நெய்வேலி வட்டாரத்தில் 1935ல் ஜம்புலிங்க முதலியாரின் நிலத்தில் பீறிக்கொண்டு வந்த கருப்பு நீரும் அவருடைய கொடை உள்ளமும்தான்,நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்றால் மிகையாகாது..கீழ்காணும் படம்,தமிழக தொழில் மயமாக்கலின் ஒரு மைல்கல்.



.1957 மே மாதம் 20ந் தேதி இந்நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது,நாம் செய்த பாக்கியம் என்றே கருதவேண்டும்,முன்னால் நிற்கிறாரே நம் பெரும்தலைவர் காமராஜ்,, அவர்கள் மட்டும் கொஞ்சம் அசந்திருந்தால்,இத்திட்டம் சாத்தியமாயிருக்காது,காரணம்
,திட்டக்கமிஷன் கருணைகாட்ட மறுத்துக்கொண்டிருந்த நிலையில்,தனது செல்வாக்கை உபயோகித்து, மத்திய அரசாங்க பொதுத்துறை நிறுவனமாகவாக்கிய பெருமை அவருக்கே.(மாநல அரசின் பொருளாதாரம் கோடிக்கணக்காக முதலீடு செய்யும் நிலையில்லை)
,சுரங்கம்,மின்நிலையம்,உரத்தொழிற்சாலை கரிகட்டியாலை,50 சதுர கிலோமீட்டர் நவீன நகரம்(Modern Township) என ஒரு ஒருங்கிணைந்த நிறுவனம் (Integrated Project) உருவாகி,இன்று,இந்தியாவின் நவரத்தினங்களில் ஒன்றாக மின்னுகிறது.
என்னைப்போன்ற பொறியாளர்களுக்கு ஆரம்ப காலம்,ஒரு சோதனையும்,வேதனையும்,தீக்குள் விரல்விட்ட இன்பமும்** கலந்த கனாக்காலம்
.1961 ஆகஷ்ட்--,ராட்சச யந்திரம் BWE 1137 எந்தவேளையிலும் பழுப்பு நிலக்கரியை (Lignite)தொட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு,முதல் குழந்தையை எதிர்பார்க்கும் குடும்பத்தைப்போல், அனைவரும்,குறிப்பாக சுரங்க ஊழியர்கள் தென்மேற்க்குதிசை நோக்கி காத்திருந்தோம்.பல பரிசோதனைகளுக்குப்பின் ,ஆயிரமாயிரம் டன் பழுப்பு நிலக்கரி இருக்கிறது என்று உறுதிபடுத்தியபின்தான்,1957 க்கு முன்பே சுரங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன,இருந்தாலும்,லிக்னைட் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளூர இருந்துகொண்டேதானிருந்தது,அன்றும் சந்தேக பேர்வழிகள்(Doubting Thomas es) இருந்தார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை
இந்நிலையில், அந்த ஆகஷ்ட் தினம்,".தொட்டுவிட்டோம் தொட்டுவிட்டோம்(We have touched Lignite))"என்ற ஆரவாரம்,சுரங்கத்தையே மூடிவிட்டது.அன்றடைந்த மகிழ்ச்சிக்கு ஈடிணையேது.
** இதுகுறித்து ஒரு சுவையான நிகழ்வை அடுத்தவாரம் பகிரவிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: