இக்கதைகளை படிக்க
தடையேதும் இல்லை மலை மூர்த்தி கண்ணா !!
அது ஒரு குக்கிராமம்.மக்கள் கூட்டமொன்று ,மயானத்தை
நோக்கி ஒரு பிணத்தை தூக்கிச்சென்று கொண்டிருந்தது
,
பாடையிலிருந்த
பிணமோ, குய்யோ முறையோ என்று கத்திகொண்டிருந்தது ‘ ஐயோ என்னை காப்பாற்ற யாருமில்லையா,
என்னை உயிரோடு எரிக்கப்போகிறார்களே என்று தொடர்ந்து கூச்சலிட்டது.
உடன் சென்றவர்கள் அந்த பிணத்தின் கூப்பாட்டை பொருட்படுத்த்வேயில்லை
.
பிணமோ,கட்டையவிழ்த்து கீழிறங்க முயற்சி செய்துகொண்டிருந்தது
.
அதிர்ஷ்டவசமாக, ஒரு முன்னாள் நீதிபதி அப்பக்கமாக
வருவதைப் பார்த்த பிணத்திற்கு,ஒரு நம்பிக்கை உண்டானது
.
நீதிபதியை நோக்கி ‘ ஐயா நீதிமானே ,நான் உயிரோடு
இருக்கிறேன்,ஆனால் என் சொந்த பந்தங்கள் என்னை இறந்துவிட்டதாக கூறி, இதோ எரிப்பதர்க்காக
சுடுகாட்டிற்கு தூக்கிச்செல்கிறார்கள், இதைத்தடுத்து நிறுத்தி என் உயிரை காப்பாற்ற
நீதிபதியான உங்களை ஆண்டவன்தான் அனுப்பி வைத்திருக்கிறான்போலும். என்னை காப்பாற்றுங்கள்
காப்பாற்றுங்கள் என்று கதறியது.
.
நீதிபதியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அங்கிருந்தவர்களை
விசாரிக்கத் தொட்ங்கினார்
நீதிபதி:: ‘பாடையிலுள்ளவர் தான் உயிரோடு இருப்பதாக
கூறுகிறார், எனவே ,நான் கேட்பது ஒரே கேள்விதான், அவர் உயிரோடு இருக்கிறாரா,இல்லையா?’
அங்கிருந்த அனைவரையும் ஒவ்வொருவராக விசாரித்தார்.
ஒருவர் பின் ஒருவராக,’ இவர் இறந்துவிட்டார், இறந்துவிட்டார்
“ என்று சத்தியம் செய்து கூறினர்
நீதிபதி நீண்ட ஆலோசனைக்குப்பின் அந்த பிணத்தைப்
பார்த்து
‘ நான் தீர விசாரித்ததிலிருந்து தெரியவருவது
என்னவென்றால் நீ இறந்துவிட்டாய்.’
என்று தீர்ப்பு
சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்
சுஃபி கதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக