சனி, 8 நவம்பர், 2014

குறுங்கதை # 3 மனதில் உறுதி வேண்டும்





             
கரைபுரண்டோடிய ஆற்றங்கரையில் காத்திருந்தாள் மங்கையொருத்தி
,
 கடந்து செல்ல துணை வேண்டி.

வந்தனர்,இரு இளம் வயது புத்த பிக்க்ஷுக்கள்

மங்கை தயக்கத்தோடு,அவர்கள் உதவியை நாடினாள்
.
ஒரு பிக்க்ஷு, அவளை ஏறெடுத்து பார்க்ககூட தயங்கினார்
.
மற்றொரு பிக்க்ஷு தயக்கமேதுமின்றி, உதவி செய்ய முன் வந்தார்
.
மங்கையை தோளில் சுமந்தவாரு ஆற்றை கடந்தார்,

மறு கரையில் மங்கையை இறக்கிவிட்டபின், தங்கள் ஆசிரமம்

நோக்கி பயணித்தனர்.

ஆசிரமத்தையடைந்ததும், மற்றொரு பிக்க்ஷு கேட்டார்

பிக்க்ஷுவான நீ, ஒரு மங்கையை தொடலாமா?"

. அவளை தோளில் வேறு தூக்கி ஆற்றை கடந்தாயே, இச்செய்கை

 பிக்க்ஷுவான உனக்கு தப்பென்று தோன்றவில்லையா.?” 

"அடப்பாவி நான் அவளை ஆற்றங்கரையிலேயே

 இறக்கி விட்டு வந்துவிட்டேனே,நீ இன்னுமா அவளை 

 சுமந்துகொண்டிருக்கிறாய்(மனதில்)" 

என்று பச்சாபத்தோடு பதிலளித்துவிட்டு நகர்ந்து  சென்றுவிட்டார்.

மற்றவர் செய்வதறியாது சிலையென நின்றிருந்தார்.
 
ஜென் கதை

1 கருத்து:

Andichamy சொன்னது…

மீண்டும் நன்றி தனபால்.வலைப்பதிவர்களுக்கு உங்களுடைய பங்களிப்பை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.நான் பார்க்கநேர்ந்த பல பதிவுகளில் தங்கள் பின்னூட்டங்களைக் காணும்பொழுதெல்லாம்,நேரமில்லையே என்று சால்ஜாப்பு சொல்பவர்களை நினைத்து,அவர்கள் தங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் என்று நினைப்பதுண்டு.You are omnipresent indeed !