புதன், 12 நவம்பர், 2014

குறுங்கதை # 5 அழகு- - - ! ! !-

 - - ! ! !

 இளைஞனொருவன், ஒரு பெண்ணை காதலித்து,காதலுக்கு தடையாகவிருந்த ஒருவரை கொலைசெய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தான். வழக்கு விசாரணை நடைபெறும்போது,குற்றம் சாட்டப்பட்டவனின் காதலியும் ,நீதிமன்றத்திர்க்கு வந்திருந்தாள். அவளைபார்த்த நீதிபதியே எதிர்பாராத,அதிர்ச்சிக்குள்ளானார்

..அவளை ஒரு பெண்ணென்று கருதக்கூட அவர் விரும்பவில்லை.அத்தகைய விசேஷ லக்ஷனங்களுடையவளாகவிருந்தாள். இளைஞன் கூண்டிலேறி வாக்குமூலம் கொடுத்து முடித்தபின், தன்னையே கட்டுப்படுத்த முடியாத நீதிபதி அவனைப்பார்த்து,” இவளுக்காகவா,ஒரு கொலை செய்யுமளவுக்கு துணிந்திருக்கிறாய்?”என்று கேட்டார்.

 “ எஜமான்,ஊர் உலகம் அவள் தோற்றத்தை விமரிசிப்பதை நானும் அறிவேன்.ஆனால் என் கண்களுக்கு அவள் ஒரு பேரழகி “ என்ற அவன் பதில் நீதிபதியையே சிந்திக்கவைத்தது.

 திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவிலிருந்து: இதை எந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார் என்பது ஞாபமில்லை. ஆனால் ராமனை மோகித்த சூர்ப்பநகை ராமனிடம் “ ராமா,என்னை உன் மனைவியாகப்பார், பின் நாம் தம்பதிகளாக மற்றவர்கள் பொறாமைப் படுமளவுக்கு இன்பமான வாழ்க்கை வாழ்ந்துகாட்டலாம் “ என்று கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன் .

 இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்புண்டு என கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை: