மிலான் நகர அருளன்னை மரியாவின் கோவிலுள்ளடங்கிய துறவற உணவகத்தில்,ஒரு புற சுவற்றில் இயேசு சிலுவையில் அறைந்த காட்சியை வரைந்து முடித்த பின்,எதிர் புர சுவரில் இயேசு தன் பன்னிரு சீடர்களுடன் அமர்ந்து உணவருந்திய “இறுதி இரவு உணவு ஓவியத்தை” வரைய அந்நாட்டின் தலைசிறந்த ஓவியரான லியொனார்டோ டா வின்சி நியமிக்கப்பட்டார்.
ஓவியத்தில் வரையப்போகும் நபர்களையொத்த மாதிரி நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. வின்சி இயேசுவின் ஓவியத்தை வரைந்து தன் பணியை ஆரம்பிக்க விரும்பி,அதர்க்கான மாதிரி நபரைத்தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது .
நாடு முழுவதிலுமிருந்து அழைத்து வந்தவர்களில் ஓவியரின் கனவு இயேசுவிர்க்கான ஒருவர் கிடைப்பது அரிதாகவிருந்தது
.பல நாட்கள் பல தேசங்களில் தேடிக் கொணர்ந்தவர்களில் ஒருவன் கருணையின் வடிவாக இறைத்தன்மையுடன், காணப்பட்டார் .அவனையே மாதிரியாக வைத்து,ஆறு மாதங்கள் காலை முதல் மாலை வரை இயேசுவின் ஓவியத்தை வரைந்து முடித்து திருப்தியடைந்தார்.
பின் சீடர்களின் ஓவியத்தை வரைய தகுந்த மாதிரியை தெரிவு செய்து யூதாசைத்தவிர மற்ற பதினோரு சீடர்களையும் வரைந்து முடித்தார்,
யூதாசுக்கான மாதிரி நபர் தேர்வு,ஒரு சவாலாகவே இருந்தது. யூதாசு,பணத்தாசையும் அதர்க்காக எந்தபாவத்தையும் செய்யும் கொடூர மனம் படைத்த காரணத்தால்தான் இயேசு பெருமானை ஒரு சில தங்க நாணயங்களுக்காக காட்டிக்கொடுத்து வரலாற்றில் வஞ்சகத்தின் அடையாளமாக அறியப்படுபவன்
அத்தகைய ஒரு நபருக்கான மாதிரி தேடி நாடு நகரங்களெங்கும் அலைந்து ரோம் நகரின் சிறையொன்றில் பல கொலை,கொள்ளை கற்பழிப்பு ஆகிய குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்த ஒருவனை அரசின் உத்தரவு பெற்று மிலானுக்கு அழைத்து வந்தனர்
. அவன் தோற்றம் யூதாசுவின் ஓவியத்திர்க்கு பொருந்தும் என ஆமோதித்த வின்சி அவனை மாதிரியாக வைத்து ஆறு மாதங்களுக்கும் மேலாக காலை முதல் மாலைவரை கடினமாக உழைத்து, யூதாசு என்ற துரோகியின் ஓவியத்தை வரைந்து முடித்தார்.
ஓவியம் முடிந்ததும் கைதியை சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல காவலர்கள் வந்து விலங்கிட முற்படுகையில் அந்த கைதி வின்சியை நோக்கி விரைந்து அணுகி " ஐயா,என்னை யாரென்று தங்களுக்கு தெரியவில்லையா" என்று கேட்டான்.
இந்த கேள்வியை எதிர்பாராத வின்சி “இல்லையே என்றார். தொடர்ந்து, "என்னை சற்று உற்றுநோக்கிப் பாருங்கள் ,என்னை முன் பின் பாத்ததில்லையா” என்று பரிதாபமான குரலில் கேட்டான். டா வின்சியும் உன்னை கடந்த ஆறு மாதங்களாகத்தான் தெரியும், அதர்க்கு முன் பார்த்ததேயில்லை என்றார்.
கைதி கண்ணீர் விட்டுக்கதறி “ ஐயா ஆறு வருடங்களுக்கு முன் நான் இங்கு ஓவிய மாதிரியாக தங்களிடம் பணியாற்றிருக்கிறேன். தாங்கள் அப்பொழுது என்னை மாதிரியாக வைத்து வரைந்த ஓவியம்தான் இயேசுவுனுடையது.” என்றான்.
லியொனார்டோ டி வின்சியின் தலை சுற்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக