அது ஒரு வனப்பகுதி. அதிலொரு சந்நியாசி வாழ்ந்தார்,சந்நியாசிகளுக்கே
பெருமை தரும் எளிய வாழ்க்கை முறையை அனுசரித்து,நாள்தோரும்,அடிவார கிராமத்திற்குச் சென்று,பிச்சையெடுத்து,தன்
அன்றாட உணவுத்தேவையை நிறைவேற்றிக்கொள்வது அவரது தினசரி கைங்கரியங்களிலொன்று.
..நாளாக நாளாக,கிராம மக்கள் அவருக்கு பிச்சையிடுவதை தவிர்க்கவே
விரும்பினர்.அவர்களொன்றும் பெரும் வசதிபடைத்தவர்களல்லவே..
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,சந்நியாசிக்கு, ஒரு சோதனை ஏற்பட்டது
,கோமனம் சம்பந்தமாக. அவரிடமிருந்ததோ இரண்டு ,ஒன்று அணிய மற்றொன்று கொடியில் உலர என்றிருந்தன
,சில நாட்களாகவே, உலரவைத்த கோமனம், காணாமல் போய்க்கொண்டிருந்தது, வேறு வழியில்லாமல்
,உணவோடு ,கோமனத்திற்காக பழைய துணிகளையும் யாசித்தார்.
ஏற்கனவே எரிச்சல்பட்டுக்கொண்டிருந்த
கிராம மக்கள் முணங்க ஆரம்பபித்தனர்.”சோறு போடுவதே தண்டம்,அதோடு கோமனத்திற்கு துணி வேறு
வேண்டுமாக்கும்”என்று புலம்பினர்
.
அத்தோடு நிற்காமல், துணி யாசிப்பதின் ரகசியத்தை கண்டுபிடித்தனர்
.உலரப்போடும், கோமனத்தை, காட்டெலிகள் கவ்விக்கொண்டு கம்பி நீட்டிக்கொண்டிருந்தன. பாவம்
சந்நியாசியும் வேறு வழியில்லாத காரணத்தால்தான் கோமனத்திற்கு துணி யாசித்தார் என்பதை அறிந்த கிராமமக்கள்
ஒரு யோசனையும் கூறினார்கள் பூனை வளர்த்தால்,அது எலிகளை விரட்டியடித்து, துணியைக்காப்பாற்றும்
என்றதோடல்லாமல்,ஒரு பூனையையும் கொடுத்தனர்.
கோமனத் ,திருட்டு நின்றது. ஆனால் அடுத்த
பிரச்சினை உருவாகியது..
மறு நாள் யாசிக்க வந்த சந்நியாசி,பசியால் வாடும் பூனைக்கு பால்
வேண்டும் என்றார்.
சோற்றோடு துணி கேட்ட பரதேசி,இப்பொழுது பால் வேறு கேட்கிறாரே என்று
சங்கடப்பட்டாலும், பூனை கொடுத்த நாம் அதைக்காப்பாற்ற பால் கொடுப்பது கடமையென்று கருதி
,பாலும் உணவும் கொடுத்தனர்.
நாட்கள் நகர்ந்தன, பால் கொடுத்து சலித்துப்போன மக்கள் ,ஒரு பசுமாட்டை
தானம் கொடுத்து இதை வைத்து பால் கறந்து, பூனைக்கு கொடுத்து, பால் யாசிப்பதை கைவிடச்சொன்னார்கள்.
மாட்டை தானம் பெற்ற நாளிலிருந்து சந்நியாசி ஊருக்குள் செல்வதைத்
தவிர்த்தார். சந்நியாசியின் வருகை குறைந்திருப்பதைக்கவனித்த மக்கள் விசாரித்துப்பார்த்து,ஒரு
உண்மையை கண்டுபிடித்தனர்.
பசு மாட்டை வனப்பகுதிகளில் மேய்த்து ஊட்டமளித்து கொழுக்கவைத்து
,பால் கறந்து,திருவோடுகளில் சேமித்து, பூனைக்கு ஊட்டி தானும் குடித்து, உணவத்தேவையை
குறைத்துக்கொண்டு, சில நாட்கள் மட்டும் யாசிக்கச்சென்றார்.
சந்நியாசி, பூனையோடு தானும்
கொழு கொழுவென்றாகிவிட்டார். கிராம மக்களும் தொல்லை விட்டதென்று நிம்மதி பெருமூச்சு
விட்டனர்..
சந்நியாசி சாமியாரானார், ஏனென்றால் இவர் உடம்பை பார்த்தே ஒரு நாடோடி,
அவருடைய சிஷ்யனானான் ,சிஷ்யனுக்கு சாமியானார் நம் சந்நியாசி.
சிஷ்யன் கடும் உழைப்பாளி, அதனால் பால் உற்பத்தி அவர்கள் தேவைக்கதிமாக
இருந்தது. எனவே ,உபரி பாலை கிராம மக்களிடம் விற்பனை செய்தனர். .பணம் சேர்ந்தது,
வருமானம் பெருகவும், அதைக்கொண்டு ஒரு காளை மாட்டை வாங்கினார். சந்நியாசி.
பசு கன்று ஈன்றது. .படிப்படியாக ,கன்றுகாலிகள் பெருகியதால், பால் பண்ணை ஒன்றை உருவாக்கி
அதர்க்குச் சொந்தக்காரரானார்.
பண்ணையாரான சாமியார், ஒரு வீட்டைக்கட்டினார், காடு திருத்தி, கழனி
உருவாக்கினார். பண்ணை வருமானம் பெருகியதால் ,வேலையாட்களைச் சேர்த்துக்கொண்டார். கூட்டம்
பெருகியதால் பண்ணை விஷ்தரிக்கப்பட்டு, பணப்பயிர்கள் பயிரிட்டு, தானியங்கள் உற்பத்தி
செய்து, அதனை விற்பனை செய்து அந்த வட்டாரத்திலேயே செல்வமும் செல்வாக்குமுள்ள பெரும் பண்ணையாரானார்.
எனவே அந்தஸ்த்திர்கேற்றவாரு, மாளிகையொன்று கட்டி ,ஒரு மங்கை நல்லாளையும்
மணந்து, கௌரவமான ஒரு சம்சாரியுமானார்..நமது சாமியார்.
இப்படியாக, சந்நியாசி சாமியானார், ,சாமி பண்ணையாரானார், ,பண்ணையார்
பெருங்கொண்ட பண்ணையாகி, சுக போகங்களையனுபவித்து வாழ்ந்து வந்தார்.
வருடங்கள் உருண்டோடின, பண்ணை வீட்டுக்கு ஒரு முனிவர் வந்தார் ,பண்ணையாரும்
அவர் குடும்பத்தினரும் அவரை விழுந்து விழுந்து உபசரித்தனர்.
முனிவரும் மிக்க மகிழ்ச்சியடைந்து.
உரையாடிக் களித்த வேளையில் முனிவர் எதிர்பாராதவிதமாக ‘,நான் ‘பல ஆண்டுகளூக்கு முன்,
இவ்விடத்திற்கு வந்திருந்தபோது ,ஒரு இளம் சந்நியாசி இங்கு ஜப தபங்களில் ஈடுபட்டு பிச்சையெடுத்து வாழ்ந்து
வந்தாரே அவர் இப்போது எங்கிருக்கிறார்? அவரை பார்க்க விரும்புகிறேன், என்றார்.
உடனே பண்ணையார் முனிவரின் காலில் விழுந்து சாஷ்டாங்க நமஷ்காரம்
செய்து,” ஸாமி, என்னை மன்னிக்கவேண்டும், அந்த சந்நியாசி அடியேனே..
ஒரு கோமனத்தை காப்பாற்ற முயற்சித்து
இன்று கோமானாகிவிட்டேன்.
ஆசீர்வதிக்கவேண்டும் என யாசித்தார்.
முனிவரும், இன்முகங்காட்டி, முறுவலித்து ஆசீர்வாத பிச்சையிட்டு விடைபெற்றார்
_ _ _ ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதைகளில் ஒன்று..
2 கருத்துகள்:
ஹா... ஹா... நல்ல கதை...
மீண்டும் நன்றி தனபால்
கருத்துரையிடுக