மலையடிவார பேரூரொன்றில்
பள்ளி மாணவனொருவன் தன் படிப்பைத்தொடர விடுமுறை நாட்களிலும் மாலை வேளைகளிலும் வீடு வீடாக
சென்று பொருட்களை நேரடி விற்பனை செய்து பணம் சம்பாதித்தான்.
அப்படிப்பட்ட ஒரு
விடு முறை நாளன்று,வீடு வீடாக ஏறி இறங்கியதில் களைப்புற்று,பசியுமேற்பட ஏதாவது சாப்பிடாலாமென்றெண்ணி
அருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையை நோக்கிச்சென்று,என்ன வாங்கலாம் என்று யோசித்தவாறு
பொருட்களை நோட்டமிட்டான்.சட்டென்று அப்பொழுதுதான் தன்னிடம் போதிய காசு இல்லை என்பதை
உணர்ந்தான்.உணர்ந்த மறுகணமே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.
அச்சமயம்,கடையிலிருந்த
சிறுமி,”அண்ணே,கொஞ்சம்,கடையை பார்த்துக்கங்க,வீட்டுக்கு போயிட்டு வந்த்ரேன்”என்று கூறிவிட்டு
அவன் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.
சிறிது நேரம் கழித்து
ஒரு சொம்பு நிறைய மோர் கொண்டு வந்து “ குடிங்கண்ணே என்று நீட்டினாள். பசி கிரக்கத்திலிருந்த
மாணவன் அதை ஆவலோடு வாங்கி குடித்தபின்தான் என்ன நடந்தது என்று உணர்ந்தான் .தான் பசியால்
வாடுவதையும் பொருளெதுவும் வாங்கும் நிலையில்லையென்பதை அறிந்து தக்கதருணத்தில் மோர்
தந்து உதவியதை வியந்து,”மோருக்கு எவ்வளவு கொடுக்கனும் என்று கேட்டுவைத்தான்.
“தவிச்ச வாயிக்கு
தண்ணி கொடுத்து அதுக்கு காசு வாங்ரது நம்ம ஊர் பழக்கமாண்ணே”என்று அச்சிறு,மி கேட்டது
கன்னத்தில் அறைந்ததுபோலிருந்தது.
ஆண்டுகள் பல சென்றன.
பெரியவளான அச்சிறுமி நடுத்தர நகரமொன்றில் பணியாற்றும் பொருட்டு தினமும் பேருந்தில்
சென்று வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட பயணத்தின்போது,
விபத்திற்குள்ளாகி, பலத்த காயங்களுடன் அம்மாவட்ட பெருநகரிலிருந்த ஒரு ஆஷ்பத்திரிக்கு
கொண்டு செல்லப்பட்டாள். அங்கிருந்த டாக்டர்கள் மூத்த டாக்டருக்கு செய்தியனுப்பி அவர்
வருகைக்காக காத்திருந்தனர்.
திருமலையான் டாக்டர்
அந்த மாவட்டத்தின் கண்கண்ட தெய்வம்.தீராத வியாதியெல்லாம் அவர் கைபட்டாலே குணமாகிவிடும்
என்ற நம்பிக்கைக்கு பாத்திரமான அவர் வந்ததும் நோயாளின் நிலமை குறித்து விவாதித்தனர்.மண்டையில்
பலத்த அடியின் காரணமாக அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.அதர்க்கான ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டன,
திருமலையான் டாக்டருக்கு அந்த பெண் எங்கிருந்து வந்திருக்கிறாள் என
அறிந்ததும்,அவளைப்பார்க்க வார்டுக்குச்சென்றார்.அவர் அங்கு கண்டது வேரு யாருமல்ல தனக்கு
அன்று மோர் கொடுத்தவள் என்று அறிந்ததும்,வேதனைப்பட்டார். இருப்பினும் தன் சக்தியுட்பட்ட
தீவிர முயற்சியினால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து உயிர் பிழைத்தெழுந்தாள்.
ஒரிரு வாரங்கள்
சென்றபின் குணமாகி வீடு திரும்பும் சமயம் பில் கட்டவேண்டிய நிலையில் அதர்க்கான பணத்தை
ஏற்ப்பாடு செய்ய ஊருக்குச்சென்றிருந்த தந்தையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.அது சமயம்
செவிலி பில்லைக்கொண்டுவந்து கொடுத்தார்
. தனது சக்திக்கு மீறின தொகையாகவிருக்குமோவென
பயந்துகொண்டே பில்லைப்பிரித்துப்பார்த்தாள் .என்ன ஆச்சரியம் “ பணம் செலுத்தப்பட்டு
விட்டது—விலை மதிப்பற்ற ஒரு சொம்பு மோரின் மூலமாக “ என்றதைப் பார்த்ததும் அந்த அண்ணன்தான்
புகழ்பெற்ற டாக்டர் திருமலையான் என்று அறிந்து நன்றிப்பெருக்கினால் கண்ணீர் விட்டாள்.
3 கருத்துகள்:
உருக்கமான கதை ஐயா...
மிக்க நன்றி தனபால்
உங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டு பதிவுகளை தொடர வேண்டுகிறேன் ஐயா... (தங்களின் அடுத்த பதிவை அறிந்தேன்...)
கருத்துரையிடுக